அதிவேக ரயில் கட்டண உயர்வு அமல் : பயணிகள் கடும் எதிர்ப்பு ; வாபஸ் பெற கட்சிகள் வலியுறுத்தல்

சென்னையில் இருந்து சதாப்தி ரயிலில் பெங்களூர் செல்ல ஏசி இருக்கை  வகுப்பில் அடிப்படை கட்டணம் 506 ரூபாயாகும். இவற்றுடன் உணவுக்கட்டணம் 92  ரூபாய், முன்பதிவுக் கட்டணம் 40 ரூபாய், சூப்பர் பாஸ்ட் கட்டணம் 45 ரூபாய்,  சேவை வரி 27 ரூபாய் சேர்த்து 710 ரூபாய் கட்டணம்.

சென்னையில் இருந்து சதாப்தி ரயிலில் பெங்களூர் செல்ல ஏசி இருக்கை வகுப்பில் அடிப்படை கட்டணம் 506 ரூபாயாகும். இவற்றுடன் உணவுக்கட்டணம் 92 ரூபாய், முன்பதிவுக் கட்டணம் 40 ரூபாய், சூப்பர் பாஸ்ட் கட்டணம் 45 ரூபாய், சேவை வரி 27 ரூபாய் சேர்த்து 710 ரூபாய் கட்டணம்.

சென்னை : ரயில்வேயின் வருவாயை பெருக்கும் நோக்கில், சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ரயில்களில் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பயணிகளும், எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் டீசல் விலை உயர்வு உட்பட பல்வேறு காரணங்களை காட்டி ரயில் கட்டணம் பலமுறை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இவை தவிர சூப்பர் பாஸ்ட் கட்டணம், சேவை வரி, கல்வி சேவை வரி, தூய்மை பாரத வரி, விவசாய நல வரி என மறைமுக கட்டண உயர்வுகள் தனி. போதாக்குறைக்கு, சில்லரை பிரச்னையை தீர்ப்பதற்காக என்று கூறி 1, 2, 3, 4, 6, 7, 8, 9 ரூபாய் வசூலிப்பது அகற்றப்பட்டு, கட்டணங்கள் 5 ரூபாய் மடங்காக நிர்ணயிக்கப்பட்டன. இந்நிலையில், சிறப்பு ரயில்கள் இயக்கும் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு பிரீமியம் சிறப்பு ரயில், தட்கல் பிரீமியம் சிறப்பு ரயில், தட்கல் சிறப்பு ரயில், சுவிதா சிறப்பு ரயில், சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் என பல மடங்கு கட்டண ரயில்கள்தான் சிறப்பு ரயில்கள் என்றாகிவிட்டன. இந்த ரயில்களில் ஒவ்வொரு 20 சதவீதத்திற்கும் கட்டணம் பல மடங்கு உயர்ந்து கொண்டே செல்லும். சிறப்பு ரயில்களே பல மடங்கு கட்டண ரயில்கள்தான் என்றான பிறகு வேறு வழியில்லாமல் பயணிகள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

எவ்வளவு கட்டணம் உயர்த்தினாலும் பயணிகள் பயன்படுத்தாமல் இருப்பதில்லை என்று கண்டுகொண்ட ரயில்வே நிர்வாகம், வழக்கமான ரயில்களிலும் இப்படி பல மடங்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்தது. அதன்படி, பரிசோதனை முயற்சியாக முதல்தர ரயில்களான ராஜதானி, சதாப்தி, துரந்தோ ரயில்களில் செப்டம்பர் 9ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று ரயில்வே அறிவித்தது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் இயக்கப்படும் சென்னை – புதுடெல்லி உள்ளிட்ட 42 ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், சென்னை – கோவை, சென்னை – மைசூர், சென்னை-பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் உட்பட 46 சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், சென்னை- நிஜாமுதீன் (புதுடெல்லி), சென்னை – மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் உட்பட 54 துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் நாடு முழுவதும் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இந்த ரயில்களில் உள்ள முதல் வகுப்பு மற்றும் உயர் வகுப்புகளை தவிர 2, 3 அடுக்கு ஏசி, ஏசி இருக்கை, 2ம் வகுப்பு படுக்கை, 2ம் வகுப்பு இருக்கை ஆகிய வகுப்புகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, இந்த ரயில்களில் உள்ள முதல் 10 சதவீத இடங்களுக்கு வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும். அடுத்து 11 முதல் 20 சதவீத இடங்களுக்கு 10 சதவீதமும், 21 முதல் 30 சதவீத இடங்களுக்கு 20 சதவீதமும், 31 முதல் 40 சதவீத இடங்களுக்கு 30 சதவீதமும், 41 முதல் 50 சதவீத இடங்களுக்கு 40 சதவீதமும் கட்டணம் அதிகரித்துள்ளன.

மேலும் 51 முதல் 100 சதவீத இடங்களுக்கு 50 சதவீத கட்டணம் அதிகரித்துள்ளது. இதில் 3 அடுக்கு ஏசி வகுப்புகளில் உள்ள 41 முதல் 100 சதவீதம் வரையிலான இடங்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. 51 முதல் 100 சதவீதம் வரையிலான இடங்களுக்கு கட்டண உயர்வு 50 சதவீதம் என்று சொன்னாலும், தேவைக்கு ஏற்ப இந்த கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த கட்டண உயர்வு அடிப்படை கட்டணத்தில் மட்டுமே என்பதால் 10 முதல் 50 சதவீத கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவே ஏசி வகுப்பாக இருந்தால் சேவை வரியும் வசூலிக்கப்படும். எனவே, கட்டண உயர்வுக்கு ஏற்ப சேவை வரியும் உயரும். கட்டணமும் ₹5ன் மடங்காக வசூலிக்கப்படுவதால் உண்மையில் கட்டண உயர்வு குறைந்தது 11 முதல் 55 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில் முன்பதிவுக் கட்டணம், சூப்பர் பாஸ்ட் கட்டணம், உணவுக் கட்டணம் ஆகியவற்றில் மாற்றம் இல்லை.
ராஜதானி, சதாப்தி, துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்களில் பெரும்பாலும் திடீர் பயணம் மேற்கொள்பவர்கள்தான் என்பதால் 4 மாதத்திற்கு முன்பே திட்டமிட்டு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவு. அதனால், நேற்று கட்டண உயர்வுக்கு தொடங்கிய முன்பதிவு பெரும்பாலும் நாளை முதல் ஒரு மாதத்திற்குள் பயணம் செய்வதற்காகவே இருந்தது.

இதன் காரணமாக, நேற்று முன்பதிவு செய்தவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தியே இந்த ரயில்களில் முன்பதிவு செய்தனர். சென்னையில் இருந்து சதாப்தி ரயிலில் பெங்களூர் செல்ல ஏசி இருக்கை வகுப்பில் அடிப்படை கட்டணம் 506 ரூபாயாகும். இவற்றுடன் உணவுக்கட்டணம் 92 ரூபாய், முன்பதிவுக் கட்டணம் 40 ரூபாய், சூப்பர் பாஸ்ட் கட்டணம் 45 ரூபாய், சேவை வரி 27 ரூபாய் சேர்த்து 710 ரூபாய் கட்டணம். நேற்று முன்பதிவு செய்தவர்கள் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உள்ள இடங்களுக்கு முன்பதிவு செய்ததால் அடிப்படை கட்டணம், இதர கட்டணங்களையும் சேர்ந்து 980 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அதேநேரத்தில் முதல்வகுப்பு ஏசி இருக்கை கட்டணமான 1,435 ரூபாயில் மாற்றமில்லை. கட்டண உயர்வு அடிப்படையில் முன்பதிவு செய்த பலரும், முதல் வகுப்பு ஏசி இருக்கை கட்டணத்திற்கு நிகராக வசூலிக்கிறார்களே என்று குமுறினர். மேலும் சிலர் இனி பெங்களூருக்கு சதாப்தி ரயிலில் போவதற்கு பதில் 2 அடுக்கு ஏசி ரயிலில் போவதுதான் வசதி என வேதனை தெரிவித்தனர். கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

மங்களூர், பாண்டியனுக்கும் இதே கதி?

‘‘ரயில் கட்டணம் பரிசோதனை முயற்சி என்று ரயில்வே அறிவித்திருந்தாலும் இந்த பல மடங்கு கட்டண உயர்வு முறையை நிரந்தரமாக்கவே வாய்ப்பு அதிகம். அதுமட்டுமின்றி, பாண்டியன் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ் உட்பட மேலும் பல ரயில்களுக்கு இந்த முறை விரிவுப்படுத்தபட உள்ளது’’ என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உயர்வு மூலம் ரயில்ேவக்கு 500 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என தெரிகிறது.

42 ராஜ்தானி, 46 சதாப்தி, 54 துரந்தோ ரயில்கள் இந்தியா முழுவதும் தற்போது இயக்கப்படுகின்றன.
131 ரயில்களில் அதிகபட்சமாக ஒன்றரை மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
3,8ல் கோவா-வேளாங்கண்ணி இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் 300 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டது.
1.68லட்சம் கோடி ரூபாய் ரயில்வேயின் ஆண்டு வருமானம்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>