அதிரடியாக வீடுகளை இடித்த வட்டாட்சியருக்கு அபராதம்

ஆக்கிரமிப்பட்டதாக கூறி அனுப்பப்பட்ட நோட்டீசின் காலக்கெடு முடியும் முன்னரே வீட்டை இடித்த பெண் தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Demolition-of-houses

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட மூவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளாதாக கூறி, அவற்றை 21 நாட்களுக்குள் அகற்ற வேண்டுமென செங்கல்பட்டு வட்டாட்சியரும், பொதுப்பணித்துறை உதவி பொறியாளரும் நோட்டீஸ் அனுப்பினர். இந்த நோட்டீசை எதிர்த்து மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்ரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,
21 நாள் காலக்கெடு அக்டோபர் 17ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை இடித்துவிட்டதாக அன்பரசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறபித்த உத்தரவுபடி, இரு அதிகாரிகளும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

அப்போது நீதிபதிகள், காலக்கெடு முடியும் முன்னர் வீட்டை எப்படி இடிக்க முடியுமெனவும், அதிகாரிகள் சட்டத்திற்கு மேலானவர்களா எனவும் கேள்வி எழுப்பினர். இது நாகரிக சமுதாயமா அல்லது காட்டாட்சியா என கேள்வி எழுப்பியதுடன், மனுதாரர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தாலும் கூட சட்டப்படிதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என அறிவுத்தினர்.

இடிக்கப்பட்ட வீட்டில் இருந்தவர்களை உங்கள் வீட்டில் தங்குவதற்கு உத்தரவிடலாமா என கண்டனமும் தெரிவித்தனர்.

அப்போது வீட்டை இடிக்க உத்தரவிடவில்லை என கூறிய பெண் தாசில்தார் மன்னிப்பு கோரினார். அனால், தாசில்தார் தான் இடிக்க உத்தரவிட்டார் என பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் என திட்டவட்டமாக கூறினார்.

இதையடுத்து இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாக உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த தொகையை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>