அதிமுக வார்டு கவுன்சிலரும் வெட்டி கொலை

2016-10-10-00-08-01

திருத்தணி கண்ணிகாபுரத்தில் காரில் வந்த அதிமுக 13 வார்டு கவுன்சிலரும் மேற்குமாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளருமான ஆறுமுகம்(45)என்பவரை திருத்தணி கன்னிகாபுரம் சாலையில் உள்ள அவரது குடிநீர் ஆலைக்கு சென்ற போது ஐந்துக்கும் மேற்பட்ட மர்மகும்பலால் மறித்து கார் கண்ணாடியை உடைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது அதில் வெட்டப்பட்டு தப்பிஓட முயன்ற இவரை அக்கும்பல் சாலையில் தூரத்தி வெட்டி சாய்தத்துவிட்டு தப்பிசென்றது .ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே.அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர் . அதிமுக தலைமை இவரை மீண்டும் திருத்தணி நகராட்சி 13 வார்டில் போட்டியிட அறிவித்தது.இந்தநிலையில்
கடந்தமாதம் 30 ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று ஆறுமுகத்தை வெட்டி கொல்ல முயன்றது.அப்போது தப்பி சென்ற கும்பலில் அரக்கோணத்தை சேர்ந்த ஒருவரைபொதுமக்கள் பிடித்து திருத்தணிகாவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .இந்த நிலையில்ஆறுமுகத்தினை அதே கும்பல் வெட்டியதா?என்பது குறித்தும் திருத்தணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>