அதிமுக எம்.எல்.ஏவை அறைந்தவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் 21ம் தேதி இரவு போளுர் உள்ள அதிமுக நகர செயலாளர் பாண்டுரங்கன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க தனது காரில் இருந்து இறங்கி வரும் போது எம்.ஜி.ஆரின் பிறந்த நாளுக்கு மேடை அமைத்ததில் பணம் பெறுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வசந்தம் மணி என்ற அதிமுக பிரமுகர் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வத்தினை கன்னத்தில் அறைந்தும் தாக்கியும், ஆபாசமாகவும் பேசியும் கார் கண்ணாடியை உடைத்து அங்கிருந்து தப்பிவிட்டார்.

இதுகுறித்து போளூர் காவல் நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் வசந்தம் மணி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டவர். 24ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக வேலூர் அடுக்கும்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அவருக்கு தலையில் இரண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் இருந்த வசந்தம்மணி சிகிச்சை பலனின்றி ஜன.31ம் தேதி உயிர் இழந்தார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>