அதிக கலெக்‌ஷனுக்கு ஆசைப்பட்டு மரண விளையாட்டில் தனியார் பஸ்கள்

அதிக கலெக்‌ஷனுக்கு ஆசைப்பட்டு மரண விளையாட்டில் தனியார் பஸ்கள்

திருச்சியில் தனியார் பஸ்கள் அதிக கலெக்ஷனுக்கு ஆசைப்பட்டு மக்கள் உயிரைப்பற்றி கவலைப்படாமல் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் வேகமாக பஸ்களை இயக்குவதால் விபத்துகள் அதிகம் நேர்கின்றன.

 

அதிக கலெக்‌ஷனுக்கு ஆசைப்பட்டு மரண விளையாட்டில் தனியார் பஸ்கள்

 

திருச்சி: திருச்சியில் தனியார் பஸ்கள் அதிக கலெக்ஷனுக்கு ஆசைப்பட்டு மக்கள் உயிரைப்பற்றி கவலைப்படாமல் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் வேகமாக பஸ்களை இயக்குவதால் விபத்துகள் அதிகம் நேர்கின்றன. மெயின்கார்டு கேட் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகளை ஏற்றிய தனியார் பஸ், வேகத்துடன் அப்பகுதியில் உள்ள காந்தி சிலை வளைவில் திரும்பியது. வேகமாக பஸ் திரும்பியதால் படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் 3 பேர் நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

 

பொதுமக்கள் சத்தம் போட்டு பஸ்சை நிறுத்தினர். அதிர்ஷ்டவசமாக பின்னால் பெரிய வாகனங்கள் வரவில்லை. இதனால் மாணவிகள் உயிர் தப்பினர். இதைப்பார்த்த பஸ் பயணிகள், பொதுமக்கள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு சாலையோரம் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போக்குவரத்து எஸ்ஐ ராஜமோகன் பஸ் டிரைவருக்கு ஆதரவாக பேசி, மாணவிகளையும், பொதுமக்களையும் மிரட்டி கலைந்து செல்லுமாறு கூறினார்.

 

ஆத்திரமடைந்த பொதுமக்கள், கீழே விழுந்ததில் காயமடைந்த மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது பற்றி யோசிக்காமலும், டிரைவர் மீது நடவடிக்கை எடுக்காமலும் இப்படி அலட்சியமாக பேசுவது குறித்து தட்டிக்கேட்டனர். இருந்தபோதிலும் பஸ் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த பஸ்சை பாதுகாப்போடு எஸ்ஐ வழியனுப்பினார். மேலும் கீழே விழுந்த மாணவிகள் பற்றி கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இது அங்கிருந்த பயணிகள், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>