அடுத்த மாதம் நடைபெறும் ஐநா மாநாட்டில் சுஷ்மா பங்கேற்பு: பிரதமர் மோடி புறக்கணிப்பு

அடுத்த மாதம் நடைபெறும் ஐநா மாநாட்டில் சுஷ்மா பங்கேற்பு: பிரதமர் மோடி புறக்கணிப்பு

அடுத்த மாதம் நடைபெறும் ஐநா மாநாட்டில் சுஷ்மா பங்கேற்பு: பிரதமர் மோடி புறக்கணிப்பு

புதுடெல்லி: அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காத நிலையில், அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகள் பொது சபையின் மாநாடு அடுத்த மாதம் 20ம் தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது. 26ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில் 150 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

சிறப்பு வாய்ந்த இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் பருவநிலை மாற்றம், அகதிகள் மறுவாழ்வு, தீவிரவாத தடுப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.

ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலால் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் அந்நாடுகளில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

அகதிகளை ஏற்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதற்கு தீர்வுகாணும் வகையில், ஐநா மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர். இந்நிலையில், ஐநா மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்தாண்டு நடைபெற்ற ஐநா சபை மாநாட்டில் பங்கேற்ற மோடி, ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், தீவிரவாத தடுப்பு, பருவநிலை மாறுபாட்டில் உள்ள சவால்கள் குறித்து பேசினார்.

இந்நிலையில், இந்தியாவின் கோரிக்கைகள் சிலவற்றை ஐநா பரிசீலிக்காததால் மோடி அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.

எனவே, இந்த மாநாட்டை அவர் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. ஐநா சபை மாநாட்டில் அண்டை நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன ஆகியோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>