அடிப்படை வசதியைக்கூட செய்துதராத திண்டுக்கல்லுக்கு சிறந்த மாநகராட்சி விருது

அடிப்படை வசதியைக்கூட செய்துதராத திண்டுக்கல்லுக்கு சிறந்த மாநகராட்சி விருது

அடிப்படை வசதியைக்கூட செய்துதராத திண்டுக்கல்லுக்கு சிறந்த மாநகராட்சி விருது

* பொதுமக்கள் அதிருப்தி

திண்டுக்கல் : குண்டும் குழியுமான சாலைகள், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர், சாலையெங்கும் ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்னைகளில் சிக்கி திண்டுக்கல் பரிதவித்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல்லுக்கு சிறந்த மாநகராட்சி என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் நகராட்சி 2014ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து இதன் எல்லையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, பொன்மாந்துறை புதுப்பட்டி, பிள்ளையார்நத்தம், குரும்பபட்டி, செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, பள்ளபட்டி ஆகிய ஊராட்சிகளை இணைக்க திட்டமிடப்பட்டன. இதற்கான அறிவிப்புகளும் வெளியாகின.

எல்லை விரிவாக்கத்திற்காக தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டார். இதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சியுடன் இணைய உள்ள ஊராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுமா அல்லது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்து தேர்தல் நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்தது.

ஆனால் இதற்கான பணி முடங்கிக்கிடப்பதால் தற்போதைக்கு எல் லை விரிவாக்கம் இல்லை என்ற மாநகராட்சி அறிவித்துள்ளது. எல்லை விரிவாக்கம் மட்டுமல்ல, அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்வதிலும் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியாக தகுதி உயர்வினால் தங்களது அடிப்படைத் தேவைகளிலும் மாற்றம் வரும் என்று காத்திருந்த மக்களுக்கு பெரும் அவதியே பரிசாகக் கிடைத்துள்ளது.

பாதாள சாக்கடைத் திட்டம் இன்னமும் நிறைவடையவில்லை. இதனால், மாநகரின் பெரும்பான்மையான இடங்கள் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. வாகன ஓட்டிகளுக்கு முதுகுவலி உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.

குடிநீர் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் கிடைக்கிறது. பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. இதனால் சாலைகளின் அகலம் குறைந்து கடுமையான நெரிசலும், பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மேற்கு ரத வீதி, கச்சேரி தெரு, பழநி சாலை, ஆர்த்தி தியேட்டர் சாலை, கிழக்கு ரத வீதிகளில் இந்நிலை அதிகம்.மாநகருக்கு ஏற்ப இலவச கழிவறை வசதி இல் லை. இதனால் தெரு ஓரப்பகுதிகள் சிறுநீர் கழிக்கும் இடமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது.

பாதாள சாக்கடைப் பணியின்போது வீட்டு உபயோகக் குழாய் இணைப்புகளையும் தவறுதலாக உடைத்து விடுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்கள்தான் செலவு செய்து சரி செய்து கொள்ள வேண்டியதுள்ளது.பஸ் ஸ்டாண்ட் முழுவதும் சாலைகள் பெயர்ந்து கிடக்கின்றன. கேடுவிளைவிக்கும் வண்ணங்கள் கலந்து இனிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகளும் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகரித்தே பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். குளங்கள் தூர்வாரப்பட்டதே தவிர, நீர்வரத்திற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதனால், அது அலங்காரக் குழியாகவே காட்சி அளிக்கிறது.இந்நிலையில், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிற்காக திண்டுக்கல்லை சிறப்பு மாநகராட்சியாக தமிழக அரசு அறிவித்து ரூ.25 லட்சம் பரிசுத்தொகையையும் வழங்கியுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ரவுண்ட்ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், நாகல் நகரைச் சேர்ந்த லட்சுமி, பேகம்பூரைச் சேர்ந்த அரபுமுகமது ஆகியோர் கூறுகையில், மாநகராட்சியானால் பல்வேறு வசதிகள் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால், அதற்கான எந்தத் திட்டமும் செயல்படுத்தவில்லை. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்வதில்கூட மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது” என்றனர்.
மாநகராட்சியாக மாறியும் அதற்கான எந்த ஏற்பாடுகளும், வசதிகளும் செய்யாததால் மறுபடியும் நகராட்சியாகவே மாற்றம் செய்ய வேண்டும் என்று கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி தரப்பில் கேட்டபோது, “ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு இணையம் உதவியுடன் ரூ.70.50 கோடியில் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் வழங்க பகிர்மானக் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. ஆத்தூர் அணையில் மறுகால் பாயும் நீர் விரயத்தைத் தடுக்க ரூ.20 கோடி மதிப்பில் புதிய துணை அணை கட்டப்பட உள்ளது.
நடைமுறைக்கு வரும்போது குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். அரசு சார்பில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. இதற்கான குழு சமர்ப்பித்த பிறகே விருதிற்காக திண்டுக்கல் தேர்வு செய்யப்பட்டது” என்று முடித்துக் கொண்டன

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>