அசாமில் காவல் நிலையத்தின் மீது துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி; தொடரும் தாக்குதல்களால் பதற்றம்

அசாமில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். கர்பிஆங்கிலான் என்ற ஊருக்குள் நுழைந்த தீவிரவாதிகள் காவல் நிலையம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அசாமில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். கர்பிஆங்கிலான் என்ற ஊருக்குள் நுழைந்த தீவிரவாதிகள் காவல் நிலையம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அசாம்: அசாமில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். கர்பிஆங்கிலான் என்ற ஊருக்குள் நுழைந்த தீவிரவாதிகள் காவல் நிலையம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதை சற்றும் எதிர்பாராத போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் துப்பாக்கி குண்டு பட்டு சரிந்தனர். இதில் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேபிஎல்டி என்ற தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதே போல் அம்மாநிலத்தின் டிம்சுக்கியா பகுதியில் உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடந்தவாரம் கோக்ரஜா நகரில் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாகினர். ஆட்டோவில் வந்த தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தினர். ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

மற்றவர்கள் தப்பியோடினர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து தீவிரவாத அமைப்புகளும் அசாமை தற்போது தாக்கி வருவது அம்மாநில அரசின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. தொடரும் தாக்குதல்களால் அம்மாநிலத்தில் பதற்றம் நீடிக்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>