அகமதாபாத்தை உலகப் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அறிவித்தது

201707090149124533_Ahmedabad-declared-world-heritage-city-by-UNESCO_SECVPF

இந்த அறிவிப்பை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

“இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தை உலகப் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அறிவித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார் ரூபானி. டெல்லி மற்றும் மும்பையுடன் அகமதாபாத் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய நகரமாகும் போட்டியிலுள்ளது.

அகமதாபாத் ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னால் அகமது ஷாவால் கோட்டை நகரமாக அமைக்கப்பட்டது. காந்தியார் இங்கு 1915 முதல் 1930 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார். முதன் முறையாக 1984 ஆம் ஆண்டில் பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அகமதாபாத் மாநகராட்சி பாரம்பரிய பிரிவு ஒன்றையும் உருவாக்கியது. இந்நகரம் 2011 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியில் வெளியிடப்பட்ட யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய நகரமாகக் கூடிய பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>